தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் சென்ற முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, ' தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும்; அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை' என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் , 'இ-பாஸ் தருவது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றும்; இ- பாஸ் சிக்கல்களைக் களைய கூடுதலாக ஒரு குழு என அனைத்து மாவட்டங்களிலும் தலா 2 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன' எனவும் தெரிவித்தார். அதேபோல், ’பாஜகவை விட்டு நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு வந்தால் மீண்டும் சேர்ப்போம்' எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே எஸ்.வி.சேகர் குறித்து பேசிய முதலமைச்சர், 'வழக்கு வந்தால் எஸ்.வி.சேகர் ஒளிந்துகொள்வார் என்றும்; எங்களுக்கு இந்தி தெரியும் என எஸ்.வி.சேகருக்கு எப்படி தெரியும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் முதலில் எஸ்.வி.சேகர் எந்த கட்சியைச் சேர்ந்தவர்?' எனவும் கடுமையாக சாடினார்.