திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சென்னமநாயக்கம்பட்டி அருணாச்சலம் நகர் பகுதியில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் பட்டாசு கடை உள்ளது. பல வட்டங்களாக குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு கடை உள்ளது. இந்நிலையில் தற்போது பட்டாசு கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கடையில் இருந்த பட்டாசுகள் மிகப்பெரிய சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின.
இதனால் பதற்றமடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியர் அலுவலகம் என்பதால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உட்பட அனைத்து அரசு அலுவலர்களும் நேரில் வந்துள்ளனர்.
மேலும் பட்டாசு தீவிபத்தின் போது கடைக்குள் இருந்த ராஜேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் பட்டாசு கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளன.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி மோசடியில் சிக்கியவருக்கு பாஜகவில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டதால் சர்ச்சை!