ETV Bharat / state

சொன்ன வாக்குறுதிகள் என்னாச்சு ஐ.பி.? - களத்தில் குதிக்கும் திலகபாமா - தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தல் வாக்குறுதிகளை அமைச்சர் பெரியசாமி நிறைவேற்றும்வரை போராட்டம் நடத்தப்படும் என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

ஐ. பெரியசாமி
ஐ. பெரியசாமி
author img

By

Published : Aug 11, 2021, 9:53 AM IST

திண்டுக்கல்: 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது ஆத்தூர் தொகுதியின் பாமக வேட்பாளர் திலகபாமா வீரக்கல் ஊராட்சியில் திமுக வேட்பாளர் ஐ. பெரியசாமியை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி திமுக தொண்டர்களுக்கும், பாமக நிர்வாகிகளுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இருதரப்பினரும் செம்பட்டி காவல் நிலையம், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர். இச்சூழலில் திலகபாமா ஆத்தூர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி திலகபாமா ஆத்தூர் நீதிமன்றத்தில் முன்னிலையாக வந்திருந்தார்.

'12 ஆண்டுகளுக்குப் பிறகு பாய்ந்தது வைகை; இது திமுகவின் சாதனை!'

பின்னர் செய்தியாளரைச் சந்தித்த திலகபாமா, "ஆத்தூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் நின்றிருந்தபோது பரப்புரையை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என் மீது பொய் வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள்.

அந்த வழக்குகளைச் சட்டப்படி எதிர்கொள்வதற்காக ஆத்தூர் தொகுதிக்கு இன்று வந்திருக்கிறேன். தேர்தல் முடிந்த பிறகும் நாங்கள் குடகனாறு பிரச்சினையை நாங்கள் கையில் எடுத்திருக்கிறோம், நதியை மீட்டெடுப்போம் என்று சொல்லி இருந்தோம், அதற்கு எங்களது சட்டப்பேரவை உறுப்பினரையும் அழைத்துவந்து அதற்கான முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறோம், முதலமைச்சரையும் பார்த்திருக்கிறோம்.

ஐ. பெரியசாமி 20 ஆண்டுகளாக எதுவுமே செய்ய முடியவில்லை என்றால் அதிமுகவின் ஆட்சியில் இருந்ததால் செய்ய முடியவில்லை எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஆனால் இன்று அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள், தேர்தல் நேரத்தில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித் தர வேண்டும்.

எல்லா மக்களுக்கும் எல்லாம்... கொள்கையை நிறைவேற்றுவோம் - ஐ. பெரியசாமி

20 ஆண்டுகள் தள்ளிப்போட்டதுபோல இப்போதும் தள்ளிப்போட முடியாது, தள்ளிப்போட விடமாட்டோம். திமுக வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஏகப்பட்ட கேள்விகள், ஏகப்பட்ட கமெண்ட்ஸ் சாமானியர்கூட கேள்வி கேட்கிறார்கள். நிதியமைச்சராகப் பொருளாதார அமைச்சராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்தக் கேள்விகளெல்லாம் எழக்கூடாது என்பதற்காக தற்போது ரெய்டை கையில் எடுத்துள்ளார்கள். ஊழல் செய்தவர்கள் மீது ரெய்டு நடத்துவது என்றால் திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்கள் அத்தனை பேர் மீதும் ரெய்டு நடத்தி உள்ளே இருக்க வேண்டியவர்கள், அது ஏற்கெனவே பல இடங்களில் நிரூபணமாகி உள்ளது.

பத்தாண்டுகள் கழித்து மக்கள் ஆட்சியைத் தந்திருக்கிறார்கள், கொஞ்சமாவது மக்களுக்கான பணியில் திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ்நாடு அரசும் ஈடுபட வேண்டும்" எனப் பேசினார்.

இதையும் படிங்க: பேரவை விடுதியில் ரெய்டு நடந்தபோது அத்துமீறிய அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.