ETV Bharat / state

வண்ணமிழந்த சுங்குடி சேலை தொழிலாளர்களின் வாழ்வதாரம்...! - handloom

திண்டுக்கல் மாவட்டம் என்றால் பெரும்பாலானோருக்கு பூட்டு தான் நினைவுக்கு வரும். ஆனால் அதே திண்டுக்கல் மாவட்டத்தின் சின்னாளப்பட்டி சுங்குடி சேலை உலக முழுவதும் ஃபேமஸ்.

story-of-chinnalapatti-sungadi-saree
story-of-chinnalapatti-sungadi-saree
author img

By

Published : Nov 16, 2020, 3:12 PM IST

எப்போதும் சின்னாளப்பட்டி பகுதியில் இருந்து சேலைகள் வாங்கி செல்பவர்களை ரயில் பயணங்களில் காணலாம். எளியவர்களால் நெய்யப்படும் சுங்குடி சேலைகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, அந்தமான், குஜராத், மேற்குவங்கம், தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜவுளி கடைகள் என உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சேலைகளுக்கு பெயர்போன இந்த ஊரின் தொடங்க காலப் பெயர் சேலையூர் என்பது தான் என்று காந்தி கிராமிய பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முன்னாள் பேராசிரியர். மு.குருவம்மாள்.

சேலையூரில் நெய்யப்படும் சின்னாளப் பட்டு என்பது தான் இந்த ஊரின் அடையாளம். பின்னர் சின்னாளப் பட்டு என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் சின்னாளப்பட்டியாக மருவியுள்ளது. கலைநயமிக்க பட்டு புடவைகளில் தொடங்கிய சேலை தயாரிப்பு, காலமாற்றத்தால் காட்டன் சேலை, சுங்குடி சேலை என மாறிப்போனது.

இதனிடையே பருத்தி நூல் தவிர்த்து பாலிஸ்டர் துணி வரவினால் நெசவு தொழிலை நலிவடைந்தது. இதனால் இப்பகுதியில் இருந்த பலரும் வாழ்வதாரத்திற்காக வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தனர். குறிப்பாக அவர்கள் டெல்லியில் கட்டுமான பணிகள் மற்றும் வீட்டு வேலைகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து எஞ்சியிருப்பவர்கள் எல்லா விதமான சேலை தயாரிப்பிலும் ஈடுபட்டனர். குறிப்பாக சின்னாளப்பட்டியின் சுங்குடி சேலைகள் பெரும் பிரபலமடைந்தது. இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் இங்கிருந்து சுங்குடி சேலைகள் செல்ல தொடங்கியது. இந்தநிலையில் பாரம்பரிய அடையாளமான சுங்குடி சேலைக்கு சென்றாண்டு மத்திய அரசின் புவீசார் குறியீடு வழங்கப்பட்டது.

கைத்தறி, சுங்குடி, காட்டன், பாலிஸ்டர் என எல்லா வகையான சேலை மற்றும் சுடிதார்கள் என தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலை, சுடிதார்கள் என சின்னாளப்பட்டியில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுவந்தது. இப்படி பலரது வாழ்வில் அங்கம் வகித்த சின்னாளப்பட்டி சேலை வணிகம், கரோனாவின் தாக்கத்தால் தற்போது சின்னா பின்னமாகியுள்ளது.

ஒரு சேலையில் ஆயிரக்கணக்கான நூல் பின்னல்கள் இணைய, ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பு ஒன்றுப்பட வேண்டும். சின்னாளப்பட்டி சுங்குடி சேலைகள் வெண்ணிற துணிகளாக கோயம்புத்தூரில் இருந்து பெறப்பட்டு, மதுரை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் வண்ணச்சாயங்கள் பூசப்படும். தொடர்ந்து சின்னாளப்பட்டியில் டிசைன் பிரிண்டிங் செய்யப்பட்டு, சிரத்தன்மைக்காக கஞ்சி போட்டு காய வைக்கப்படும். பின்னர் இஸ்திரி செய்யப்படும் சுங்குடி சேலைகள் தான் இந்தியா முழுவதும் பயணப்படுகின்றன.

வண்ணமிழந்த சுங்குடி சேலை தொழிலாளர்களின் வாழ்வதாரம்

கடந்த 40 வருடமாக சுங்குடி சேலைக்கு கஞ்சி போடும் பணியில் ஈடுபடுகிறேன். சென்ற வருடம் நிற்க கூட நேரமில்லை. ஆடி மாதம் அம்மன் வழிபாடு அதிகமிருக்கும் என்பதால் சிவப்பு, மஞ்சள் சேலைகளுக்கான ஆர்டர்கள் வந்து குவிந்துவிட்டது என கூறும் ஆறுமுகம், இம்முறை கரோனாவால் எந்த வருமானமும் இல்லாமல் என்ன செய்வது என தவித்து வருவதாக வலியுடன் கூறுகிறார்.

இப்போதெல்லாம் விடியும்போது இன்று வேலை இருக்குமா என எண்ணும் நிலையில் எழும் தொழிலாளர்களுக்கு, கடந்த ஆறு மாதத்தில் ஒரு மாத வேலை தான் கிடைத்துள்ளது. அவர்களுக்கு ஊதியம் கொடுக்க போதுமான வருமானமின்றி தவிக்கின்றனர்.

20 நாள்களுக்கு ஒரு முறைதான் வேலை. வேலையில்லாமல் வீட்டில் இருந்தாலும் வாடகை கொடுக்க வேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களில் பெற்ற கடன்களை கட்ட வேண்டும். அரசு தரும் அரிசி, பருப்பு மாதம் முழுவதும் போதவில்லை, வேறு பொருள்கள் வாங்கவும் பணமில்லை. ஒரு வேளை பால் வாங்குவதற்கு 30 ரூபாய் தேவைப்படும். இந்த சூழலில் அரசு தரும் ஆயிரம் ரூபாய் எப்படி பத்தும். தினசரி வேலை இருந்தால் யாரையும் எதிர்பார்க்க மாட்டோம். ஆனால் இப்போது யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று ஏங்குகிறோம் என கரோனாவின் கோர தாண்டவத்தை சுருங்க விளக்கிவிட்டார் தொழிலாளி அரியநாச்சி.

ஊரடங்கால் சுங்குடி தொழிலாளர்களின் பொருளாதாரம் சரிவை சந்துள்ளது. அதனை நம்பியிருந்தவர்களின் வாழ்வும் முடங்கியுள்ளது. இத்தொழிலை நம்பியிருந்த 20 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் அலமாறிகளை அலங்கரித்து யாருக்கு என்ன பயன். பண்டலாக கட்டி வைப்பதால் நூல் சேலைகள் எளிதில் நிறம் மங்கிவிடும். ஓர் கட்டுபாட்டிற்குள் மனிதர்களை மட்டுமல்ல பொருள்களையும் வைக்ககூடாது.

சின்னாளப்பட்டி சேலைகள் என்றாலே மக்கள் அதிகமாக விரும்புவர். இங்கு எல்லா விலையிலும், எல்லா தரத்திலும் சேலைகள் கிடைக்கும். சராசரியாக ஒரு நாளைக்கு 5000க்கும் மேல் சேலைகள் உற்பத்தி செய்யப்படும். ஆனால் இப்போது விற்பனை இல்லாத காரணத்தல் புதிதாக சேலைகள் உற்பத்தி செய்யவில்லை. உற்பத்தியான சேலைகள் விற்பனை ஆகும் வரை தொழிலாளர்களுக்கு வேலை தர முடியாத சூழல்தான் உள்ளது.

கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி வரி விதிப்பால் வணிகத்தில் 30 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு கரோனாவால் 40 சதவீத வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாள்களில் தொழிலாளர்களுக்கு எப்படி வேலை அளிக்கப் போகிறோம் என்பதே கேள்விக்குறி தான் என்கிறார் விற்பனையாளர் பாபு.

உடைகளின் பங்கின்றி தமிழ் சமூகத்தில் எந்த நிகழ்வும் முழுமைபெறாது. வண்ண உடைகளின் வாசத்தை தேங்கிய குடோன்களில் தேடும் நாள் போக வேண்டும் என சுங்குடி சேலை தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு முன்வந்து நிவாரண உதவி வழங்குவதன் மூலம் தொழில் மேன்மைக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.