ETV Bharat / state

ராட்சத மலைப்பாம்பினை லாவகமாக கையில் பிடித்த இளைஞர்

திண்டுக்கல்: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் 12 அடி நீள மலைப்பாம்பினை லாவகமாகப் பிடித்துள்ளார்.

லாவகமாக மலைப்பாம்பினை கையில் பிடித்த இளைஞர்
லாவகமாக மலைப்பாம்பினை கையில் பிடித்த இளைஞர்
author img

By

Published : Jan 25, 2020, 12:15 PM IST

Updated : Jan 25, 2020, 1:55 PM IST

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியைச் சேர்ந்த தாவூத் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அகரம் அரசுப் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அந்த சாலையினைக் கடக்க ஒரு மலைப்பாம்பு சென்றுள்ளது. இதனைப் பார்த்த இளைஞர் நெஞ்சில் சிறிதும் பயமில்லாமல் துணிவுடன் தனது இரு சக்கர வாகனத்தின் வெளிச்சத்தின் உதவியுடன் லாவகமாக சுமார் 12 அடி நீள மலைப்பாம்பினைப் பிடித்துள்ளார்.

மலைப்பாம்பினை கையில் பிடித்த இளைஞர்

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மலைப்பாம்பினைப் பார்க்க குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடச்சந்தூர் தீயணைப்புத் துறையினர் இளைஞரிடம் இருந்த மலைப்பாம்பினை மீட்டு வனப்பகுதியில் சென்றுவிட்டனர்.

இதையும் படிங்க: தாயுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த பிள்ளைகள்!

Intro:திண்டுக்கல் 25.01.20

திண்டுக்கல் அகரம் அரசு பள்ளி அருகே சாலையோரத்தில் சென்ற மலைபாம்பை அப்பகுதியில் சென்ற வாலிபர் பிடித்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தார்.

Body:திண்டுக்கல் மாவட்டம் அகரம் அரசு உயர்நிலைப்பள்ளி பின்புறமுள்ள காட்டுப்பகுதியில் இருந்து சுமார் 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ரோட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தது. அப்பொழுது அவ்வழியே உலகம் பட்டியைச் சேர்ந்த தாவிது என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது பாம்பு சாலையை கடப்பதை பார்த்துள்ளார்.

உடனே இருசக்கர வாகன வெளிச்சத்தின் உதவியுடன் மலைப்பாம்பை தைரியமாக பிடித்துள்ளார். மேலும் தீயணைப்புத்துறையினர் வரும்வரை பாம்பை பிடித்தவாறு வெகு இயல்பாக அமர்ந்து கைபேசியில் உரையாடி கொண்டிருந்தார். இச்செய்தியைக் கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் பாம்பை காண்பதற்கு கூடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை வனச்சரகத்தில் விட்டு விடுவதற்காக வாங்கி சென்றனர்.Conclusion:
Last Updated : Jan 25, 2020, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.