திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக கொடைக்கானல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் கொடைக்கானல் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடைக்கானல் மேல்மலை கிராமம் குண்டுபட்டி பகுதியைச் சேர்ந்த குமார், ராஜா, சாமிதுரை, மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, மருதப்பன் ஆகிய ஆறு பேர் இதே பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் ஆறு பேரை கைது செய்த கொடைக்கானல் உதவி ஆய்வாளர் ரமேஷ் ராஜா, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.