திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜா பொதுமக்களைக் கவரும் வகையில் ராஜா வேடமணிந்து வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
இதனைக் கண்ட பெண் ரசிகர்கள், இளைஞர்கள் அலைபேசியில் அவருடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். தன்னை சந்திக்கும் ரசிகர்களிடத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, பரிசுப் பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்கும்படி முனீஸ்ராஜா கேட்டுக்கொண்டார்.
ஊழலை ஒழிக்க தனது சொந்த ஊரான பழனியில் இருந்து, அரசியல் பயணத்தைத் தொடங்குவதற்கு வேட்பாளராக களம் இறங்கியுள்ளதாக நடிகர் முனீஸ்ராஜா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 'இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்' - மோடியிடம் எகிறும் ஸ்டாலின்