திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் கல்பாக்கம் இணைந்து ‘தரமான வாழ்க்கைக்கான அணு தொழில்நுட்பங்கள்’ என்ற தலைப்பில் ஒருநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் வின்சன்ட் அண்டனி குமார் தலைமை தாங்கினார். இதில், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் முனைவர் வெங்கடேசன், ஜலஜா மதன் மோகன் அவர்கள் சிறப்புரையாற்றி விழாவைத் தொடங்கிவைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மேலும், கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினா, கருத்தரங்கம் போட்டிகள் நடைபெற்றன.
இதில், பங்கேற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களின் அறிவியல் திறனை மேம்படுத்திக் கொண்டனர்.
இதையும் படிங்க: ’கிராமப்புற மாணவர்களுக்கு அறிவியல் கற்பிக்கும் சென்னை ஐஐடி’