ETV Bharat / state

‘அதிமுக‌ பொதுச்செய‌லாள‌ர் ச‌சிக‌லா வ‌ருக‌ வ‌ருக’ ‌- சமூக வலைதளங்களில் பரவும் போஸ்டரால் சர்ச்சை! - சசிகலா குறித்த போஸ்டர்

திண்டுக்கல்: கொடைக்கானலில் ‘அதிமுக‌ பொதுச்செய‌லாள‌ர் ச‌சிக‌லா வ‌ருக‌ வ‌ருக’‌ என்னும் வாசகம் கொண்ட போஸ்டர்‌ ச‌மூக‌ வ‌லை‌த‌ள‌ங்க‌ளில் ப‌ர‌வுதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதலங்களில் பரவும் போஸ்டரால் சர்ச்சை

author img

By

Published : Feb 2, 2021, 9:31 AM IST

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து ஜனவரி 27ஆம் விடுதலைசெய்யப்பட்ட சசிகலாவிற்கு கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஜ‌ன‌வ‌ரி 31ஆம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சசிகலா விடுதலைசெய்யப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் அமமுகவினர் மட்டுமல்லாது சில அதிமுகவினரும் ஆதரவு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டிவருகின்றனர். இவ்வாறு சுவரொட்டி ஒட்டிய அதிமுகவினரை அக்கட்சித் தலைமை கட்சியிலிருந்து நீக்கம்செய்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

தொட‌ர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான‌லில் ‘அதிமுக‌ பொதுச்செய‌லாள‌ர் ச‌சிக‌லா வ‌ருக‌ வ‌ருக’‌ என்னும் வாசகம்கொண்ட போஸ்டர்‌ ச‌மூக‌ வ‌லை‌தள‌ங்க‌ளில் ப‌ர‌விவ‌ருகிற‌து. அந்த போஸ்ட‌ரில் முத‌ல‌மைச்ச‌ர் ப‌ழ‌னிசாமி, துணை முத‌லமைச்சர் ப‌ன்னீர்செல்வ‌ம் ஆகியோர‌து புகைப்ப‌ட‌ங்க‌ளும் இட‌ம்பெற்றுள்ள‌ன.

மேல்ம‌லை கூக்கால் ஊராட்சி 5ஆவ‌து வார்டு உறுப்பின‌ர் அருண் என்ப‌வ‌ரும், ப‌ள்ளங்கி கோம்பை கிளைக் க‌ழ‌கச்‌ செய‌லாள‌ர் முத்தையா ஆகிய‌ இருவ‌ர் போஸ்ட‌ர் வ‌டிவ‌மைத்துள்ள‌ன‌ர். இந்தச் சர்ச்சைக்குரிய போஸ்டரால் கொடைக்கான‌ல் அதிமுக‌வின‌ரிடையே ச‌ற்று குழ‌ப்ப‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌து.

இதையும் படிங்க: தீயாக வரும் தியாகத் தலைவி சின்னம்மா - அதிமுக நிர்வாகி சசிகலாவுக்கு வைத்த பேனரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.