ETV Bharat / state

'தொண்டர்கள் மத்தியில் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்துகிறார்' - திண்டுக்கல் சீனிவாசன் - dindigul district news in tamil

அதிமுகவைச் சேர்ந்த ஒரு சிலருடன் தொலைபேசியில் பேசி, அதிமுக வளர்ச்சிக்கும், புகழுக்கும் சசிகலா களங்கம் விளைவித்து வருவதாகவும், தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த அவர் முயற்சித்து வருவதாகவும் திண்டுகல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

dindigul-seenivasan-sasikala-create-confusion-among-admk-volunteers
'தொண்டர்கள் மத்தியில் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்துகிறார்'- திண்டுக்கல் சீனிவாசன்
author img

By

Published : Jun 20, 2021, 10:34 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுகவின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 20) மாலை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. தேர்தலுக்கு முன்பு அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்வதாக அறிவித்த அவர் தற்போது அரசியல் முக்கியத்துவத்தைத் தேடிக்கொள்ளும் வகையிலும், அதிமுகவை அபகரிக்கும் நோக்கிலும் செயல்படுகிறார்.

'தொண்டர்கள் மத்தியில் சசிகலா குழப்பத்தை ஏற்படுத்துகிறார்'- திண்டுக்கல் சீனிவாசன்

அவரின் செயலை வன்மையாக கண்டிக்கின்றோம். அதிமுகவைச் சேர்ந்த ஒரு சிலருடன் தொலைபேசியில் பேசி, அதிமுக வளர்ச்சிக்கும், புகழுக்கும் களங்கம் விளைவித்து வருகிறார். அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலா குழப்பத்தை உருவாக்கி வருகிறார். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது" என்றார்.

இதையும் படிங்க: அதிமுகவை அபகரிக்க முயற்சி செய்பவர்களின் எண்ணங்கள் ஈடேறாது - முன்னாள் அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.