ETV Bharat / state

ஒரே நேரத்தில் மூன்று வீடுகளில் கொள்ளை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு! - திண்டுக்கல்லில் ஒரே நேரத்தில் மூன்று வீடுகளில் கொள்ளை

திண்டுக்கல்: சின்னாளப்பட்டி அருகே ஒரே நேரத்தில் மூன்று வீடுகளில் கொள்ளையடித்த கும்பலைத் தேடும் பணியில், காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் மூன்று வீடுகளில் கொள்ளை
ஒரே நேரத்தில் மூன்று வீடுகளில் கொள்ளை
author img

By

Published : Feb 23, 2020, 12:26 PM IST

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி அருகே கலைமகள் காலனியில் வசிக்கும் சேகர் என்பவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டின் கதவை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், வீட்டிலிருந்த 1 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒன்பது பட்டுச்சேலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அதேபோல அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவிலிருந்த 80 ஆயிரம் ரூபாய் பணம், குத்துவிளக்கு, பித்தளைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மேலும், அதே பகுதியில் வசிக்கும் மாலதி என்பரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணம், பூஜை அறையில் சுவாமிக்கு வேண்டுதலுக்கு வைத்திருந்த அரை கிலோ வெள்ளி உள்ளிட்டப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட மூன்று வீடுகளின் உரிமையாளர்களும் நேற்று சிவராத்திரி என்பதால் குலதெய்வ கோயிலுக்கு வழிபாட்டிற்காக வெளியூர் சென்றிருந்தனர். இதனையறிந்த கொள்ளை கும்பல் மூவரது வீட்டிலும் கைவரிசையைக் காட்டிவிட்டு தப்பியுள்ளது.

பின்பு, இன்று வீடு திரும்பிய மூன்று வீட்டின் உரிமையாளர்களும் வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து பணம், வெள்ளி, பித்தளைப் பொருட்கள், பட்டுச் சேலைகள் கொள்ளைபோனது தெரிய வந்துள்ளது.

வீட்டை சோதனையிடும் காவல் துறையினர்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னாளபட்டி காவல் துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அடுத்தடுத்து உள்ள மூன்று வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: மருத்துவமனையில் நோயாளியைப் பார்க்க வந்தவரின் செல்போன் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.