திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோர்கள் வசித்த 35க்கும் மேற்பட்ட இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் இப்பகுதியில் வசித்துவரும் மருத்துவர்கள், செவிலியர், பத்திரிகையாளர்கள், அரசுத் துறை உயர் அலுவலர்கள் தடை உத்தரவு முடியும்வரை வெளியில் செல்லக்கூடாது என மாவட்ட கோட்டாட்சியர் உஷா அறிவுறுத்தியுள்ளார்.
இந்த உத்தரவை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 270ன் படியும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் நடத்தை விதிகள் 1972, தமிழ்நாடு குடிமைப் பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் கீழ் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 144 தடை உத்தரவை மீறும் மக்கள் : ஒரே நாளில் 217 வழக்குகள் பதிவு