திண்டுக்கல்:கொடைக்கானல் மேல்மலைக்கிராமத்தில் எழுபள்ளம் ஏரி எழில் கொஞ்சும் புல்வெளிகளுக்கு நடுவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை தூர்வாரி, தடுப்பணையின் மட்டத்தை உயர்த்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 90 லட்சம் ரூபாயில் திட்டம் வகுக்கப்ப்ட்டது.
அத்திட்டத்தை முந்தைய அரசு முறையாக செயல்படுத்தாமல் முறைகேடுகள் செய்ய முயற்சிப்பதாக புகார் எழுந்ததன. அடிப்படையில், நீதிமன்றத்தின் மூலம் அத்திட்டத்திற்கு தடை வாங்கப்பட்டது. இதனையடுத்த இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பெய்த மழை மற்றும் தென்மேற்குபருவமழையால் ஏரி முழுகொள்ளளவை எட்டியது. இந்த நீரை சுற்றுவட்டார கிராம மக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தியதும், தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: #HBD சத்யன்: ஹே தோத்தாங்குளீஸ் ஹாவிங் ஃபன்னா... "பிறந்தநாள் வாழ்த்துகள் சைலன்சர்"