ETV Bharat / state

பனி பிர‌தேச‌மான கொடைக்கான‌ல்

author img

By

Published : Apr 9, 2020, 10:35 AM IST

கொடைக்கானல் பகுதியில் க‌ட‌ந்த‌ ப‌த்து நாட்க‌ளாக‌ வெயிலின் தாக்க‌ம் அதிக‌ரித்து காண‌ப்ப‌ட்ட‌ நிலையில், இன்று ஆலங்கட்டி மழை பெய்தது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பனி பிர‌தேச‌மாக‌ மாறிய‌ கொடைக்கான‌ல்
பனி பிர‌தேச‌மாக‌ மாறிய‌ கொடைக்கான‌ல்

கரோனா வைரஸ் தொற்று கார‌ண‌மாக‌ இந்தியா முழுவ‌தும் ஊரட‌ங்கு உத்தர‌வு அமலில் உள்ளது. இதனால் சுற்றுலாத் தலமான கொடைக்கானல் பகுதியில் ம‌க்க‌ள் ந‌ட‌மாட்ட‌மின்றி சுற்றுச்சூழல் மாசு குறைந்து காண‌ப்ப‌டுகிற‌து. இந்தச் சூழலில் கோடை காலம் தொடங்கிவிட்டதால், அப்பகுதிகளில் க‌ட‌ந்த‌ ப‌த்து நாட்க‌ளாக‌ வெயிலின் தாக்க‌ம் அதிக‌ரித்து காண‌ப்ப‌ட்ட‌ நிலையில், தற்போது லேசான‌ சார‌ல் மழையும் பெய்துள்ளது.

பனி பிர‌தேச‌மாக‌ மாறிய‌ கொடைக்கான‌ல்

அதேபோல் அங்குள்ள மேல்ம‌லை, ம‌ன்ன‌வ‌னூர் கிராமத்தில் இன்று ஆலங்கட்டி மழை பெய்துள்ள‌து. இதனால் அப்ப‌குதி முழுவ‌தும் வெப்பம் தனிந்து, குளிர்ச்சி நிலவி, பனி பிர‌தேச‌ம் போல் காட்சியளித்தது.

இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இருப்பினும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை மட்டுமே நம்பி மட்டுமே வாழ்க்கை நடத்தி வந்த அப்பகுதி மக்களுக்கு, கரோனா வைரஸால் மக்கள் கூட்டம் வராததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொடைக்கானல்-கேரளா மலைப்பாதை வழியாக கரோனா பரவும் அபாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.