ETV Bharat / state

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

author img

By

Published : Mar 20, 2020, 11:48 AM IST

திண்டுக்கல்: நத்தம் சாலையில் சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் தூசி பரவுவதாக கூறி ஆர்.எம்.டி.சி காலனி பொது மக்கள் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூசி நிறைந்து காணப்படும் நத்தம் சாலை
தூசி நிறைந்து காணப்படும் நத்தம் சாலை

திண்டுக்கல், நத்தம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலைகள் சீரமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு, பல மாதங்கள் ஆகியும் பணிகள் நடைபெறாமல் இருந்துள்ளன. இதனால் சாலைகளில் தூசி நிறைந்து காணப்படுவதால், கனரக வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால், அப்பகுதியில் காற்று மாசு அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து ஆர்.எம்.டி.சி பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை தெரிவித்தனர். ஆனால், அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள், இன்று நத்தம் சாலையின் நடுவே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூசி நிறைந்து காணப்படும் நத்தம் சாலை

தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அந்தப் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நத்தம் மற்றும் காரைக்குடி பகுதிகளில் இருந்து திண்டுக்கல் வரும் பேருந்துகள் வழிநெடுகிலும் பயணிகள் அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.

இதையும் படிங்க: பழவேற்காடு ஏரியில் தடுப்புச் சுவர் கட்ட நடவடிக்கை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.