திண்டுக்கல் மாவட்ட ஊட்டச்சத்து அலுவலராகப் பணியாற்றி வருபவர், பூங்கோதை. இவர் சத்துணவு ஊழியர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மீது பணி சார்ந்த குற்றச்சாட்டுகளை எழுப்பி அவர்களுக்கு குறிப்பாணை(Memo) கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஊட்டச்சத்து அலுவலரின் நடவடிக்கையைக் கண்டித்து நேற்று இரவு(அக்.08) திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட ஊட்டச்சத்து அலுவலகம் முன்பு, சத்துணவு ஊழியர்கள் மற்றும் அமைப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் மீது மாவட்ட ஊட்டச்சத்து அலுவலர் பூங்கொடி வேண்டுமென்றே பொய்ப் புகார்கள் தெரிவித்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறினர்.
மேலும் தங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தனர். இப்போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட சத்துணவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். திடீரென்று இரவு வேளையில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் மிஷின் வேலை செய்யவில்லை... மிஷினை ஒப்படைத்த கடை ஊழியர்கள்!