ETV Bharat / state

பழனியில் விடுமுறை நாளில் செயல்பட்ட தனியார் பள்ளி - கோட்டாட்சியர் நடவடிக்கை - Kotakshiar Sivakumar ordered to send school students home

பழனி அருகே விடுமுறை நாளில் செயல்பட்ட பள்ளியில் பழனி கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பழனியில் விடுமுறை நாளில் செயல்பட்ட தனியார் பள்ளி - கோட்டாட்சியர் நடவடிக்கை

author img

By

Published : Aug 7, 2022, 10:39 PM IST

திண்டுக்கல்: பழனியில் அரசு விதிகளை மீறி ஞாயிற்றுக்கிழமையான இன்றும் பள்ளிகள் செயல்படுவதாகப் புகார்‌ எழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி கோட்டாட்சியர் சிவக்குமார், சண்முகா நதி அருகே செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆய்வு செய்தார்.

அப்போது 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எனக்கூறி வரவழைத்து பாடம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் மட்டும் நடந்து வந்தது.

இதனால் பழனி கோட்டாட்சியர் சிவக்குமார், நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியரின் வருகைக்காக நீண்டநேரம் காத்திருந்தும் யாருமே வராததால்‌ பள்ளியில் இருந்த சில ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களைக்கண்டித்தார். மேலும் பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்த கோட்டாட்சியர் சிவக்குமார், பள்ளி மாணவர்களை வீடுகளுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டதாக வருத்தத்தில் இருந்த மாணவ - மாணவிகள் அனைவரும் கோட்டாட்சியருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச்சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:செல்போன் சிக்னல், இணையதளம் என துளியும் தொலைத்தொடர்பு இல்லாத நடுக்காட்டில் உருவாகும் முதல் பட்டதாரி பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.