திண்டுக்கல்லில் நேற்று(அக் 2) தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "காந்தி ஜெயந்தி நாளில் மது இல்லாத, போதை இல்லாத, கஞ்சா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து வருகிறோம். இளைஞர்கள் போதைக்கு அடிமையாக கூடிய சூழ்நிலை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்துவிட்டது. இது வன்மையாக கண்டிக்க கூடியது.
ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விடுதலை சிறுத்தைகள் மனித சங்கிலி போராட்டம் காரணமாக சட்ட ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழல் இருந்தது. இந்த இரண்டிற்கும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதை தேமுதிக வரவேற்கிறது. மனித சங்கிலி போராட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று விடுதலை சிறுத்தைகள் அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக அவர்கள் எங்களை அழைக்கவும் இல்லை, தகவல் தெரிவிக்கவும் இல்லை. நாங்கள் பங்கேற்க போவதில்லை.
திமுக அமைச்சர்கள் அனைவருமே ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்ததுக்கு பின்பு ஒரு பேச்சும் பேசி வருகின்றனர். அமைச்சர்கள் இரட்டை நிலை பாட்டில் உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தேமுதிகவை பொறுத்தவரை நேர்மையான தேர்தலையே நாங்கள் எதிர் கொள்வோம். நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும். நேர்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு. தேமுதிக பாரதிய ஜனதா கட்சி உடனோ அதிமுக உடனோ கூட்டணி வைக்காது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'ஓ அப்படியா... நீ உட்காரு' - கிராம சபைக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடியின் பேச்சால் சலசலப்பு