திண்டுக்கல்: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் வசூல் ரீதியாகவும் கோடிக்கணக்கில் ஈட்டியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் வரும் சில காட்சிகள் வன்னியர் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளதாகப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தைத் தவறாகச் சித்திரித்த நடிகர் சூர்யாவைத் தாக்குவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றுகூட அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் சூர்யாவின் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொடைக்கானல் பாமக கட்சி சார்பில், வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா, திரைப்பட இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஆஸ்கார் விருது பெறுவதற்கான முழுத் தகுதியும் ஜெய் பீம் படத்திற்கு உள்ளது' - முத்தரசன்