ETV Bharat / state

அக்.1 முதல் பழனி முருகன் கோயிலில் செல்போன் எடுத்துச் செல்ல தடை!

Mobile prohibited inside of Palani temple: பழனி கோயிலில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் செல்போன், புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள் எடுத்துச் செல்ல தடை விதித்தும், கட்டணம் செலுத்தி பாதுகாப்பு அறையில் வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளதாகவும் கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பழனி கோயிலில் செல்போன் எடுத்து செல்ல தடை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 10:10 PM IST

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சில நாட்களாக கோயில் கருவறையின் போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இதனை தடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதனை அடுத்து பழனி கோயிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, கோயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

அந்த வகையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அக்டோபர் 1ஆம் தேதி முதல் கைப்பேசி மற்றும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை திருக்கோயிலுக்குக் கொண்டு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தவறி கொண்டு வரும் பக்தர்கள் தங்களது கைப்பேசி மற்றும் புகைப்படம் எடுக்கும் வீடியோ சாதனங்களை திருக்கோயில் நுழைவாயிலில் உள்ள படிப்பாதை, மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார் நிலையங்களில் ஏற்படுத்தபட்டுள்ள கைப்பேசி பாதுகாப்பு மையங்களில் ஒரு கைப்பேசிக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டுச் செல்லுமாறும், தரிசனம் முடிந்து பின்னர் பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவர் தற்கொலை; நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.