ETV Bharat / state

அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு - Auto drivers association files petition

திண்டுக்கல்: ஊரடங்கு உத்தரவினால் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Apr 18, 2020, 3:20 PM IST

கரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. குறிப்பாக அமைப்புசாரா, தினக்கூலி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு உள்ளதால் வாகன ஓட்டுநர்களின் வாழ்வதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் உள்ளனர்.

இந்த ஊரடங்கு உத்தரவால் தங்களது அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதாகத் திண்டுக்கல் மாவட்ட அனைத்து ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் தங்களது சூழலைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.

இதையும் படிங்க: கரோனாவை எதிர்த்து போராட்டம்... மருத்துவராக களமிறங்கிய பாஜக எம்.பி.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.