ETV Bharat / state

மாணவியை அத்துமீறி செல்போனில் படம்பிடித்தவர்கள் கைது! - திண்டுக்கல் செய்திகள்

திண்டுக்கல்: பள்ளி மாணவியை அத்துமீறி செல்போனில் படம் எடுத்ததாக தந்தை, மகன், உறவினர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறை கைது செய்தனர்.

person-who-took-the-photo-of-a-girl-arrested-in-dindigul

author img

By

Published : Aug 13, 2020, 7:14 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த தென்னம்பட்டி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சொட்டமாயனூரைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் அரசு அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருந்துள்ளார்.

இவர் அவ்வழியாக வந்த பள்ளி மாணவியை தனது செல்போனில் அத்துமீறி படம் எடுத்துள்ளார். இதனைக் கண்ட அப்பள்ளி மாணவி உதவிக்காக கூச்சலிட்டுள்ளார். பள்ளி மாணவியின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவியிடம் விசாரித்தனர்.

இதையடுத்து மாணவியின் உறவினர்கள் பாண்டியராஜனை விசாரித்தபோது, அங்கு விரைந்து வந்த பாண்டியராஜனின் சகோதரர் சேரன் ராஜ், தந்தை விசி ராஜேந்திரன், அவரது உறவினரான தர்மர் ஆகியோர் மாணவியின் உறவினர்களை சாதியைச் சொல்லி தரக்குறைவாக திட்டியதாகவும், ஆயுதங்களைக் கொண்டு மிரட்டியதாகவும் தெரிகிறது.

இது தொடர்பாக வடமதுரை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், பாண்டியநாஜன் உள்ளிட்டோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மாணவியை அத்துமீறி செல்போனில் படம்பிடித்தவர் கைது

தொடர்ந்து சாதியை சொல்லி பேசிய அவரது சகோதரர், தந்தை மற்றும் அவரது உறவினர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய வாகனங்களும் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பறிமுதல் செய்யப்பட்ட 25 வாகனங்கள் மாயம்: 3 காவலர்கள் ஆயுதப் படைக்கு மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.