திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர்ப் பகுதிகளான செண்பகனூர் , பழைய அப்பர் லேக் வியூசாலை , கீழ்பூமி, பாம்பே சோலா ,பாம்பார்புரம் , அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்கள் அமைந்துள்ளது.இந்த பகுதி முழுவதும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால் இங்கு பல்வேறு நீரோடைகள் அமைந்துள்ளது. பாம்பே சோலா, பாம்பார்புரம் நீர்வீழ்ச்சி , வட்டக்கானல் நீர் வீழ்ச்சி ,வெள்ளி நீர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய நீர் வீழ்ச்சிகள் உள்ளன.
இங்கு பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் , போன்ற குப்பைகளைக் கொட்டப்படுவதால் நீர்வளம் பாதிப்பு அடைகிறது. இதை உண்ணும் வன விலங்குகள் பெரிதும் பாதிப்படைந்து வருகிறது.
மேலும் வனப்பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளால் வன வளமும் பாதிப்படைந்து வருகிறது. எனவே நீர் ஒடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கொட்டவைப்பவர்களைக் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.