திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுமார் 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகம் கட்டி பல ஆண்டுகளான நிலையில் தற்போது அந்தக் கட்டடம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் அலுவலகத்தில் வைத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் சேதமடைந்து வருகின்றன.
எனவே கொடைக்கானலில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை புதுப்பித்து தர வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பழுதடைந்த சாலை: செப்பனிட்டுத் தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை!