திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர்ப்பகுதி மட்டுமின்றி சுற்றுலாத் தலங்கள் செல்லும் பிரதான சாலைகளில் பாலம் அமைக்கும் பணி, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
மேலும், சில தேவையற்ற இடங்களில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. சுமார் 40 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட செலவில் நடைபெறும் இந்தத் திட்டப்பணிகளால் மக்களின் வரிப்பணம் வீணடைவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நடைபெறும் பணிகளும் தாமதமாக நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதி சாலைகளில் கொட்டப்பட்டுள்ள மணல், கற்கள் ஆகியவற்றால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுவருகிறது. எனவே தேவையற்ற இடங்களில் நடைபெறும் பணிகளுக்குச் செலவிடும் தொகையை மக்களுக்குப் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாலை பாதுகாப்பு: வாழ்க்கை விலை மதிப்பற்றது, ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது!