திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
இங்குள்ள விவசாயிகள் கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிடுகின்றனர். மேலும் சீசனுக்கு ஏற்ப காய்கறி, பட்டாணி போன்றவை பயிர் செய்து அறுவடை செய்யப்படுகிறது.
குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் உறை பனி சீசன் தொடங்கும். இந்த ஆண்டு காலநிலை மாற்றம் காரணமாக மழை பெய்து வருகிறது.
இதனால் பட்டாணி பயிர் முழுவதும் நாசமாகின. தற்போது பயிருக்கு போட்ட முதலீட்டு பணத்தைக்கூட எடுக்க முடியாமல் விவசாயிகள் உள்ளனர்.
இதையும் படிங்க: விவசாயப் பயிர் கடனை தள்ளுபடி செய்க - ராமதாஸ்