ETV Bharat / state

"அடுத்த ஆண்டு கள் சந்தைப்படுத்தப்படும்" கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு, கள் குடிக்க தடை விதித்துள்ளதை கண்டித்தும், கள் சந்தைப்படுத்துதலை வலியுறுத்தியும் அடுத்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி கள் இறக்கி சந்தைபடுத்தப் போவதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2023, 8:31 AM IST

Updated : Aug 27, 2023, 9:39 AM IST

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி

கொடைக்கானல்: தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கொடைக்கானலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு அரசிடம் கள்ளுக்கு, கள்ளு கடைகளை திறக்க அனுமதி கோருவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானவை. இவை இரண்டுமே புரிதல் இன்மையின் வெளிப்பாடு ஆகும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைக்கு வந்த அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை தான் கள் இறக்குவதும், பருகுவதும் என்று கூறினார். கலப்படத்தை காரணம் காட்டி தமிழக அரசு அநியாயமாக அந்த சட்டத்தை பறித்துக் கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பாண்டிச்சேரி, கேரளா, தெலுங்கானா ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் எங்கும் கள்ளுக்கு தடை கிடையாது என்றும், அங்கு கலப்படம் செய்பவர்களை தடுக்கும் அந்த மாநில அரசுகள் மத்தியில் தமிழ்நாட்டில் மட்டும் கலப்படத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தமிழ்நாடு அரசு ஆளுமை இல்லாத அரசா? ஆளுமை இல்லாமல் போனால் ஏன் ஆட்சியிலேயே இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

ஆளுமை இல்லாத முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும், கள் கலப்படத்தை கட்டுப்படுத்த கூடிய ஆளுமை கொண்டவர் முதலமைச்சராக வரட்டும் எனவும் தெரிவித்தார். அதனையடுத்து ஜனவரி 21ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இவ்வளவு நாள் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், தங்களது உரிமையை பறித்துக் கொண்டதாகவும் கூறிய அவர், இனி அதை பறிக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், இது அரசியல் அமைப்பு சட்டம் தங்களுக்கு கொடுத்துள்ள உணவு தேடும் உரிமை எனவும் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தில் கள்ளுக்கு தடை இல்லை என்பதை சுட்டி காட்டி, அங்கு மதுபான கடைகளில் கள் விற்பனையை சந்தைப்படுத்த அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என கூறினார்.

நட்சத்திர விடுதிகள், பன்னாட்டு விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் கள் சந்தைப்படுத்தப்படும் போது தமிழ்நாடு பெரிய அளவில் ஆதாயம் பெரும் என்றும், முதன்மை மாநிலமாக மாறும் என்றும் தெரிவித்த அவர், இதனை வலியுறுத்தி தான் வரும் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்த முடிவெடுத்து உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: Thoothukudi news: தாமிரபரணி அணையிலிருந்து தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்வது குறைக்கப்படும் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

Last Updated : Aug 27, 2023, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.