ETV Bharat / state

நிவாரணம் வழங்குவதில் தாமதம்: அமைச்சர்கள் வருகைக்காகக் காத்திருப்பு என அர்ச்சகர்கள் புகார் - அர்ச்சகர்கள் வேதனை

கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்குவதாக அறிவித்த நிவாரணத் தொகையை வழங்காமல், அமைச்சர்களுக்காகக் காத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. உடனடியாக நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என அர்ச்சகர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

palani temple  palani dhandayudhapani temple  Dindigul news  Dindigul latest news  corona fund  delay to give corona fund for priest  திண்டுக்கல் செய்திகள்  பழனி கோயில்  பழனி அருள்மிகு தண்டாயுதபாணி‌சுவாமி திருக்கோயிலில்  அர்ச்சகர்கள் வேதனை  கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருட்கள் தருவதில் தாமதம்
அமச்சர்கள் வருகைக்காக காத்திருப்பு என அர்ச்சகர்கள் புகார்
author img

By

Published : Jun 12, 2021, 8:19 AM IST

திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் இயங்கும் கோயில் அர்ச்சகர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயும், நிவாரணப் பொருள்களும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கடந்த பதினைந்து நால்களுக்கு முன்பு அறிவித்தது.

ஆனால் இதுவரை பழனி தண்டாயுதபாணி‌ சுவாமி திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு நிவாரணத் தொகையும், நிவாரணப் பொருள்களும் இதுவரை வழங்கவில்லை.

இது குறித்து அர்ச்சகர்கள் கூறியதாவது, “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி‌ சுவாமி திருக்கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

ஊதியமின்றி பக்தர்கள் தரும் காணிக்கைகளை மட்டுமே நம்பியுள்ள அர்ச்சகர்கள், கடந்த இரண்டு மாதங்களாகக் கோயில்களில் பக்தர்கள்‌ அனுமதி இல்லாததால்‌ வருமானமின்றி தவித்துவருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய்‌ நிவாரண நிதியும், நிவாரணப் பொருள்களும் வழங்கப்படும் என்று அறிவித்தது வரவேற்கத்தக்கது.

ஆனால் அரசு அறிவித்து 15 நாள்களுக்கு மேலாகியும் இதுவரை நிவாரணத் தொகையும், பொருள்களும் வழங்கவில்லை. அரசு அறிவித்த அறிவிப்பு‌ அறிவிப்பாக மட்டும் இல்லாமல் உடனடியாகச் செயல்படுத்தினால் வறுமையில் வாடும் அர்ச்சகர்களின் குடும்பங்கள்‌ காப்பாற்றப்படும்.

அமைச்சர்களின் வருகைக்காக அலுவலர்கள், அர்ச்சகர்கள் என அனைவரும் காத்திருக்கலாம். ஆனால் அர்ச்சகர்களின் வயிறு காத்திருக்காது என்பதை உணர்ந்து உடனடியாக நிவாரணத்தை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்” என்றனர்.

இதையும் படிங்க: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.