ETV Bharat / state

சந்திரகிரகணம் - பழனி முருகன் கோயிலின் நடை அடைப்பு - palani temple closed

சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலின் நடை அடைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி முருகன் கோவில்
பழனி முருகன் கோவில்
author img

By

Published : Nov 8, 2022, 3:57 PM IST

திண்டுக்கல்: சந்திரகிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் வழக்கமாக நடைபெறும் கால பூஜைகளின் நேரம் மாற்றப்பட்டது. காலை 6:00 மணிக்கு கால பூஜைகள் துவங்கி இடைவெளியின்றி அடுத்தடுத்து ஆறுகால பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து காலை 10 மணியுடன் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மதியம் 2.30 மணி முதல் கோவில் நடை அடைக்கப்பட்டது. சந்திர கிரகணம் நிறைவடைந்த பின்னர் இரவு 7 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, சம்ரோஷணம் பூஜை, சாயரட்சை பூஜை மற்றும் தங்கரதம் புறப்பாடு உள்ளிட்ட வழிபாடுள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இராக்கால பூஜை முடிந்தவுடன் வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சந்திரகிரகணம் - பழனி முருகன் கோயிலின் நடை அடைப்பு

இதையும் படிங்க: ஸ்ட்ராபெரி நிலாவைக் கண்டுரசித்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.