திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில், அறிவியல் ஆராய்ச்சிகளின் செயல்படுத்துதல் - எதிர்பார்ப்புகளை ஆராய்ந்து அறிதல் பற்றிய இரண்டு நாள் இணையவழி தேசியக் கருத்தரங்கம் இன்று( ஜூலை 17) தொடங்கியது.
இக்கருத்தரங்கை பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறைகளான உயிரி தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல், வீட்டு அறிவியல், நூலகம் - தகவல் அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் வல்லுநர்கள் இணைந்து இந்த இணைய வழி தேசிய கருத்தரங்கை நடத்துகின்றனர்.
மேலும் இந்த கருத்தரங்கில் இணைய வழியாக கான்பூர், கர்நாடகா, கெளஹாத்தி, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய கருத்துச்சுருக்கப் புத்தகத்தை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி மூலமாக துணை வேந்தர் வைதேகி விஜயகுமார் வெளியிட்டார். இந்த புத்தகத்தில் ராக்கெட் இயக்கத்தின் பயன்பாடு பற்றியும், கணிதவியல் முக்கிய விஞ்ஞான தொழில்நுட்ப பயன்பாடு பற்றியும், ஏனைய அறிவியல் துறை சார்ந்த தொழில் நுட்ப கோட்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த புத்தகத்தின் குறிப்புகள் இணையதளம் வழியாக அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக கல்லூரி நிர்வாக பேராசிரியர்கள் புத்தகத்தை வெளியிட்டு இணையதளம் வழியாக விவரித்து வருகின்றனர்.