திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பணியாற்றும் சரவணன் என்பவர், பொதுமக்களிடம் புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு தலா 500/-ரூபாய் லஞ்சம் வாங்கும் காணொலி சமூக வலைதளத்தில் பரவி வைரலானது.
இதைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ளத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
விசாரணையில், பொதுமக்களிடம் சரவணன் லஞ்சம் வாங்கியது உறுதியானதால், அவரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார்.