ETV Bharat / state

சிறுமலையில் பல்லுயிர் பூங்கா: திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு - dindugal seenivasan

திண்டுக்கல்: சிறுமலையில் பல்லுயிர் பூங்கா அமையவுள்ள இடத்தை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்

dindugal seenivasan inspection
author img

By

Published : Aug 12, 2019, 8:40 PM IST

திண்டுக்கல் சிறுமலையில் காட்டெருமை, மான், செந்நாய் ,கேளை ஆடு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் அரியவகை தாவரங்கள் உள்ளன. இந்த உயிரினங்கள் அழிவதைத் தடுக்க ரூ5 கோடி செலவில் பல்லுயிர் பூங்கா சிறுமலை பழப்பண்ணை அருகே 120 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மூங்கில் பூங்கா, ஆடிட்டோரியம், பட்டாம்பூச்சி பூங்கா, சிறுவர் பூங்கா போன்றவையும் அமைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பல்லுயிர் பூங்கா அமையவுள்ள இடத்தை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "வனப்பகுதிகளில் இருந்து முன்பு ஒரு காலத்தில் மரம் எடுத்து சென்றது உண்மைதான். ஆனால் நான் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திண்டுக்கல் கொடைக்கானல், தாண்டிக்குடி மற்றும் தமிழ்நாடு எங்கும் உள்ள வனப்பகுதிகளில் மரக் கடத்தல் கிடையாது.

தற்போது மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இல்லாமல் பட்டா நிலங்களில் மரம் எடுக்க முடியாது. அதேபோல வனத்துறையை பொறுத்தவரை தவறு செய்யாத அதிகாரிகள் மட்டும்தான் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

Intro:திண்டுக்கல் 12.08.19

தமிழகத்தில் நான் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்பு மரங்கள் கடத்தப்படுவதில்லை : திண்டுக்கல் சீனிவாசன்

Body:திண்டுக்கல் சிறுமலையில் அறிய வகை தாவரங்கள், விலங்கினங்கள் அழிவதை தடுப்பதற்காகவும், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் ரூ.5 கோடியில் பல்லூயிர் பூங்கா சிறுமலை பழப்பண்ணை அருகே 120 ஏக்கரில் அமைக்கபட உள்ளது. அந்த இடத்தை இன்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் காட்டெருமை ,மான், செந்நாய், கேளைஆடு, உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் அரியவகை தாவரங்கள் உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையிலான வசதிகள் இல்லை. எனவே இங்கு உள்ள அறிய வகையில் மரங்களையும் , மிருகங்களையும் பாதுகாக்கும் விதமாக மூங்கில் பூங்கா, ஆடிட்டோரியம், பட்டாம்பூச்சி பூங்கா, சிறுவர் சிறுமியர் விளையாட்டு பூங்கா உள்ளிட்ட தகவல் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது .

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன், வனபகுதிகளில் இருந்து முன்பு ஒரு காலத்தில் மரம் எடுத்து சென்றது உண்மை தான். ஆனால் நான் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு திண்டுக்கல் கொடைக்கானல், தாண்டிக்குடி மற்றும் தமிழகமெங்கும் உள்ள வனப்பகுதிகளில் மரக் கடத்தல் கிடையாது. தற்போது மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவு இல்லாமல் பட்டா நிலங்களில் மரம் எடுக்க முடியாது. அதேபோல வனத்துறையை பொருத்தவரை தவறு செய்யாத அதிகாரிகள் மட்டும் தான் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.