ETV Bharat / state

சுழலாத ராட்டினத்தால் சுருண்ட ராட்டின தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!

author img

By

Published : Jul 2, 2020, 6:42 PM IST

Updated : Jul 2, 2020, 7:47 PM IST

துருவேறிக் கொண்டிருக்கும் ராட்டினப் பாகங்களைப் போலவே அதை நம்பியிருந்த தொழிலாளர்களின் வாழ்க்கையும் செல்லரித்துக் கொண்டிருக்கிறது. அரசு ஆதரவுக் கரம் நீட்டினால் மட்டுமே ராட்டின தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும்.

ராட்டின பாகங்கள்
ராட்டின பாகங்கள்

திருவிழாக் காலங்களில் இளசுகளின் காதல் கதை தொடங்கி பொடுசுகளின் சாகசக் கதைகள் வரை சேமித்துக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை ராட்டினங்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் திருவிழாக்கள், அறிவியல் கண்காட்சிகள் உள்ளிட்டவற்றில் ராட்டினம் சுற்றும் பழக்கம் வாடிக்கை.

இப்படி, விழாக்களைக் கொண்டாட்டமாக இல்லாமல் வாழ்வாதாரமாகக் கொண்ட ராட்டின தொழிலாளர்களுக்கு கரோனா நெருக்கடி பேரிடியாக விழுந்தது. ராட்சத தோற்றத்தில் கண்டுவியந்த கொலம்பஸ், ஜெயிண்ட் வீல் உள்ளிட்ட ராட்டினங்கள் பழைய இரும்புப் பொருள்கள் போல குவிக்கப்பட்டிருக்கின்றன.

ராட்டின பாகங்கள்
ராட்டின பாகங்கள்

என் அனுபவத்தில் இதுபோன்ற தொழில் முடக்கம் இதுவே முதல்முறை என பேச்சைத் தொடக்குகிறார் ராட்டின தொழிலாளி முத்துச்சாமி, “30 வருடமாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். எனது தந்தை விவசாயத்தை நம்பியிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்தான் எங்களது பூர்வீகம். பொய்த்துப் போன பருவ மழை இன்னபிற நெருக்கடிகள் என விவசாயம் விடுத்து ராட்டினத் தொழிலுக்குள் வந்துவிட்டோம். தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் ராட்டினம் ஓட்டிப் பிழைத்துக் கொண்டிருந்தோம்.

பொதுவாக தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி காலங்களில்தான் அதிகளவில் கோயில் திருவிழாக்கள், கண்காட்சி போன்றவை நடைபெறும். ஆனால், இந்தாண்டு கரோனா பெருந்தொற்று தாக்கத்தால் விழாக்கள் எதுவுமின்றி வீட்டில் முடங்கியுள்ளோம். எனது அனுபவத்தில் அதிகபட்சம் ஒரு மாதம் வேலையின்றி இருக்கும். மற்றபடி எல்லா மாதமும் ராட்டினங்களுடன் ராட்டினங்களாக நாங்களும் ஊர் மாற்றி ஊர் சுழன்று கொண்டிருந்தோம். ஆனால், இப்போது மூன்று மாதத்திற்கும் மேலாக வேலையின்றி போனதால் செய்வதறியாது தவிக்கிறோம்” என்றார்.

திண்டுக்கல் வட்டப்பாறை பகுதி வயல்வெளியில் உறங்கி கொண்டிருக்கும் ராட்டினங்களை, மீண்டும் எப்போது சுற்றப்போகிறாம் என்று தெரியவில்லை எனக் கூறும் முத்துச்சாமி, தனது நம்பிக்கை துளிர்விட அரசு உதவும் என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.

ராட்டினத் தொழிலாளர் கிருஷ்ணன், “20 வருடங்களில் இதுவரை மாதக் கணக்கில் வீட்டில் முடங்கியிருந்த நினைவே இல்லை. எப்போதும் பயணித்துக் கொண்டே இருப்போம். அதிலும் மே மாதம் பள்ளி விடுமுறை காலம் என்பதால் நிற்கக்கூட நேரம் இருக்காது. அடுத்தடுத்து கண்காட்சி, திருவிழா என ஓட வேண்டியிருக்கும். இந்த வருடம் ஊரடங்கு எங்கள் ஓட்டத்தை நிறுத்திவிட்டது.

ஊரடங்கில் தவிக்கும் ராட்டின தொழிலாளர்கள்!

இந்த வேலையை நம்பியே இருந்துவிட்டதால் மாற்று வேலைக்குச் செல்ல மனமில்லை. என்னைப்போல இந்தத் தொழிலை மட்டுமே நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊரடங்கினால் வாழ்வதாரம் இழந்து தவித்துவருகிறார்கள்” என்றார்.

ஊரடங்கு உத்தரவால் ராட்டினங்கள் மட்டும் நிற்கவில்லை, இதை நம்பியிருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும்தான் ஸ்தம்பித்து நிற்கின்றன. சீசனுக்கு ஏற்றவாறு இடம்பெயர்ந்து தொழில் செய்யக்கூடிய இவர்கள், தற்போது பிரித்துப் போடப்பட்ட ராட்டினப் பாகங்களை ஒன்றுசேர்க்கும் காலம், எப்போது வரும் என காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கிய கரோனா!

Last Updated : Jul 2, 2020, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.