திண்டுக்கல்: வடமதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக இருக்கிறார். இவரது மகள் நிவேதா தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். இன்று(பிப்.20) விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றார். இதனிடையே பால்ராஜ், அவரது மனைவி இருவரும் வெளியில் சென்றனர். அப்போது நிவேதா குளியல் அறைக்கு சென்று வெகுநேரமாகியும் வெளியில் வராமல் இருந்தார்.
இதனால் சந்தேகமடைந்த அவரது தம்பி கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது நிவேதா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதையடுத்து உறவினர்கள் நீவேதாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை நோக்கி புறப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் நிவேதா உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை தரப்பில், தற்கொலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருமகன் திட்டியதால் மாமியார், மாமனார் தற்கொலை முயற்சி