திண்டுக்கல்: கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த்தடுப்பு விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அலுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும், பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தடைகளைத் தாண்டி திருமணம்
நேற்று (ஆக. 20) ஆவணி முதலாவது முகூர்த்தத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும் என்பதைக் கருத்தில்கொண்டு, மக்கள் அதிகமாக கோயில்களில் கூடுவதைத் தடுக்க பழனி கோயிலில் பக்தர்கள் வழிபாட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டது. மேலும், கோயிலில் ஆகம விதிப்படி அனைத்துப் பூஜைகளும் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதனால், பழனி முருகன் கோயில் மலை அடிவாரம் பாதவிநாயகர் கோயிலின் வெளியே சாலையிலேயே நேற்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன.