ETV Bharat / state

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது - Palani Murugan Temple

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஆறாம் கால யாக பூஜையுடன் இன்று துவங்கி, காலை 10 மணியளவில் படிப்பாதை மற்றும் மரத்தில் உள்ள கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி

author img

By

Published : Jan 26, 2023, 2:03 PM IST

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி

திண்டுக்கல்: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜன.27) காலை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி அன்று முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை ஆறாம் கால யாக பூஜையுடன் துவங்கிய பழனி கோயில் கும்பாபிஷேகத் திருவிழாவை முன்னிட்டு திருக்கோயில் நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளது.

இன்று அதிகாலை பழனி மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோயில், படிப்பாதையில் உள்ள இடும்பன் கோயில், கடம்பன் கோயில், கருப்பண்ணசாமி சுவாமி கோயில், கிரிவீதியில் உள்ள 5 மயில்கள் கோயில் உட்பட 80க்கும் மேற்பட்ட திருக்கோயில் மற்றும் தெய்வங்களுக்கு நிறைவு வேள்வி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 9.50 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேலும், நாளை காலை பழனி மலைக்கோயில் மூலஸ்தான தங்க விமானம், ராஜகோபுரம் மற்றும் மூலவர் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை ஒட்டி பழனிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தும் இடம், கும்பாபிஷேகத்தைத் தடையின்றி காண ஆங்காங்கே led திரைகள், 3 இடங்களில் அன்னதானம் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்த பயணி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.