ETV Bharat / state

வெள்ளி அருவியில் கடை அமைக்க இன்னும் சில நாள்களில் நடவடிக்கை - கோட்டாட்சியர் உறுதி

திண்டுக்கல்: கொடைக்கானல் வெள்ளி அருவி அருகே சாலையோரக் கடைகள் அமைக்க அனுமதியளிப்பது குறித்து இன்னும் சில நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனு அளிக்க வந்த வியாபாரிகளிடம் வருவாய் கோட்டாட்சியர் உறுதியளித்தார்.

kodaikanal silver falls road vendors gave petition to RDO
author img

By

Published : Nov 19, 2019, 8:13 AM IST

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை வ‌ர‌வேற்கும்வித‌மாக‌, வெள்ளி அருவி ப‌குதி அமைந்துள்ள‌து. கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் நகராட்சி நிர்வாகமும் நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து அருவி அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது. இதில், சாலையோர வியாபாரக் கடைகளும் அடங்கும்.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என்றும் மீண்டும் கடைகள் அப்பகுதியில் அமைக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் கூறி சாலையோர வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வருவாய் கோட்டாட்சியர்

ஆனால், கடைகள் அமைக்க அனுமதியளிக்கவில்லை. இதையடுத்து, நேற்று 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து கடைகள் அமைக்க அனுமதியளிக்க வலியுறுத்தி அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இன்னும் ஐந்து நாள்களில் வியாபாரிகளின் பிரச்னையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பின் கடைகள் அமைக்க அனுமதியளிக்கப்படும் என்று கோட்டாட்சியர் உறுதியளித்தார். பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த பின் வியாபாரிகள் அங்கிருந்து விடைபெற்றனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல் சுற்றுலாத்தலத்தில் பயன்பாடற்று கிடக்கும் இ-டாய்லெட் கழிப்பறைகள்

Intro:திண்டுக்கல் 18.11.19

சிறு வியாபாரிக‌ள் நிர‌ந்த‌ரமாக‌ கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் க‌டை வைக்க‌ அனுமதி கோரி கோட்டாசிய‌ரிட‌ம் ம‌னு.

Body:திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌லில் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளை வ‌ர‌வேற்கும் வித‌மாக‌ வெள்ளி நீர்வீழ்ச்சி ப‌குதி அமைந்துள்ள‌து. இந்நிலையில் நெடுஞ்சாலை துறை மூல‌மாக‌ வெள்ளிநீர்வீழ்ச்சி பகுதியில் அமைந்துள்ள சாலை ஓர ஆக்கிர‌மைப்புக‌ள் க‌ட‌ந்த‌ மாத‌ம் அக‌ற்ற‌ப‌ட்ட‌து. த‌ங்க‌ளின் வாழ்வாதார‌ம் பாதிக்க‌ப்ப‌டுவ‌தால் தொட‌ர்ந்து அப்ப‌குதியில் க‌டை வைக்க‌ அனும‌தி அளிக்க‌ வேண்டுமென‌ அரசு அதிகாரிக‌ளிட‌ம் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ம‌னு அளித்த‌ன‌ர்.

ஆனால் எந்த‌வொரு ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காத‌ ப‌ட்ச‌த்தில் வ‌ருவாய் கோட்ட‌சிய‌ர் சுரேந்திர‌னிட‌ம் சிறு வியாபாரிகள் ம‌னு அளித்த‌ன‌ர். இதற்கு பதிலளித்த கோட்டாட்சியர் 5 நாட்க‌ளில் அரசின் கவ‌ன‌த்திற்கு எடுத்து செல்ல‌ப்ப‌ட்டு ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ப்ப‌டும் என‌ தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.