திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது.
மாதந்தோறும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடைக்கானல் சார்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால், கொடைக்கானலில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கொடைக்கானலில் குறைதீர்க்கும் கூட்டம் நடத்திட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்து வந்த நிலையில், அலுவலர்கள் சிலர் அவற்றைக் கண்டு கொள்ளாமல் செல்ஃபோனைப் பயன்படுத்தியது விவசாயிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: மாநிலம் தழுவிய சாலைமறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள்..!