தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து பழனி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து கொடைக்கானல் நகர்ப்பகுதிகளான முஞ்சிக்கல், நாயுடுபுரம், அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியினர் தெருமுனை பரப்புரையில் ஈடுபட்டனர்.
மேலும் ஆளும் மத்திய- மாநில அரசுகளின் குறைகளை சுட்டி காண்பித்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் திமுக, விடுதலை சிறுத்தை கட்சினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர்