திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பல்வேறு மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. இதில் தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பேத்துபாறை, அஞ்சு வீடு உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தற்போது மலை நெல்லிக்காய் விளைச்சல் அதிகரித்துக் காணப்படுகிறது.
மலைப்பகுதியில் விளையக்கூடிய இவ்வகையான நெல்லிக்காய்களில் அதிக மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக சருமப்பொலிவு, இதயம், முடி உதிர்தல், உடல் சூடு, எலும்பு, நோய் எதிர்ப்புச் சக்தி, ரத்த சோகை போன்றவற்றுக்கு இந்த மலை நெல்லிக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
இவ்வகையான நெல்லிக்காய்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டி வந்தால் வேறு ஒரு சிறந்த மருத்துவம் எதுவும் இல்லை. இதன் விலையும் மிக குறைவுதான் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:
ஆபத்து: திண்டுக்கல் அருகே தொங்கும் நிலையில் உள்ள பாறையை அகற்ற ஆட்சியர் உத்தரவு