முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவான நேற்று மாலை நேரத்தில் தண்டாயுதபாணி சாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் மலை மீதுள்ள கம்பத்தில் மகரத் தீபம் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பனை ஓலைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட சொக்கப்பனை தீயிட்டு எரிக்கப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசம் எழுப்பினர்.
இம்மலை மீது கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் பக்தர்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களும் அழிந்து போவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோயிலில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதையும் படிங்க: