ETV Bharat / state

பழனியில் கந்த சஷ்டி திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு - கந்த சஷ்டி திருவிழா

பழனியில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 30, 2022, 9:30 PM IST

திண்டுக்கல்: அறுபடைவீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (அக்.30) மாலை நடைபெற்றது.

பிற்பகல் நேரத்தில் மலைக்கோயிலில் இருந்து கீழே இறங்கிய முத்துக்குமாரசாமி, மலைக்கொழுந்து அம்மனிடம் சக்திவேல் வாங்கிவந்தார். தொடர்ந்து வீரபாகு, நவவீரர்கள் உள்ளிட்ட வீரர்கள் படைசூழ வடக்கு கிரிவீதியில் தாரகா சூரனையும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபனையும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரனையும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மனையும் முருகன் சக்திவேல் கொண்டு வதம் செய்தார்.

கந்த சஷ்டி திருவிழா

சூரசம்ஹார நிகழ்சசியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சரணகோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சூரர்களை சம்ஹாரம் செய்த நிலையில் நாளை (அக்.31) சண்முகர் -வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது. திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

இதையும் படிங்க: திருச்செந்தூரில் சூரசம்காரம்... லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.