Income Tax Raid: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை - வத்தலகுண்டு பிரதான சாலை தீயணைப்பு அலுவலகம் அருகே மும்பையைச் சேர்ந்த பங்கஜ் ஜெயின் என்பவருக்குச் சொந்தமான பிராகதி அரோமா என்ற வாசனைத் திரவிய தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது.
இங்கு நேற்று (டிசம்பர் 31) காலை 8 மணிமுதல் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேசத்திலிருந்து வருகைதந்த வருமானவரித் துறை அலுவலருடன் மதுரை மண்டல வருமானவரித் துறை அலுவலர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தொடர் சோதனை மேற்கொண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும் நிறுவனத்தின் அனைத்து வாயில்களும் பூட்டப்பட்டு வெளிநபர்கள், பணியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.
இதையும் படிங்க: 'ஆட்சியைப் பிடிக்க வேண்டியதில்லை; எங்களைக் கேட்டுதான் ஆட்சி நடக்கும்'