திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டி உள்ள சிங் குளத்தினை தூர்வாரும் நோக்கில் தனியாருக்கு செம்மண் அள்ளிக்கொள்ள அனுமதியளித்தது. ஆனால் அந்த தனியார் நிறுவனமோ சுமார் 4 மீட்டர் ஆழத்திற்கு பள்ளம் பறித்து அதிக அளவில் மண்ணை அள்ளியுள்ளது.
இந்த செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முகிலன், "ஒரு மீட்டர் ஆழத்திற்கு மட்டுமே மண் எடுத்துக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அந்த நிறுவனம் சுமார் 4 மீட்டர் ஆழத்திற்கு மண்ணை அள்ளியுள்ளது. இதில் மெகா ஊழல் நடந்துள்ளது. இதற்கு விளக்கம் தரவில்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க...இந்திய ராணுவ பிடியிலிருந்த சீன ராணுவ வீரர் ஒப்படைப்பு!