ETV Bharat / state

சென்னையில் 18 புதிய பேருந்து நிலையங்கள்.. அமைச்சர் சேகர்பாபு உறுதி! - SEKAR BABU

குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் மார்ச் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சேகர் பாபு
சேகர் பாபு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2024, 9:43 PM IST

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அந்த வகையில், சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் ஜெகந்நாதன் சாலையில் முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள முதல்வர் படைப்பகத்தின் முன்னேற்பாடு பணிகளையும், கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையத்திலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக பெரியார் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கக்கூடிய மக்களுக்கு உதவி புரிகிற வகையில், அரசின் சார்பில் பயன்படுத்துகின்ற பெரிய துறையாக போக்குவரத்து துறை உள்ளது. அந்த வகையில், முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த மாதவரம் பேருந்து நிலையத்தை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, தற்போது விழாக் காலங்களிலும் கூட அந்த பேருந்து நிலையம் அதிகளவு பயணிகள் பயன்படுத்துகின்ற அளவிற்கு ஒரு நல்ல தரத்தோடு செயல்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த காலத்தில் துவங்கப்பட்டிருந்தாலும், அதிமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லாததால், புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு பயணிகளின் தேவைகளைக் கேட்டு அறிந்து, அனைத்து தேவைகளையும் முழுமையாக நிறைவேற்றி, தொடர்ந்து வருகின்ற காலங்களில் அந்தப் பேருந்து நிலையத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று கணக்கிட்டு, கட்டமைப்புகளை உருவாக்குகின்ற பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறது.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க கூடாது - சென்னை ஐகோர்ட் உத்தரவு!

ஆம்னி பேருந்து நிலையத்தைக் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு, ரூ.42 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையம் முடிச்சூரில் 95 சதவீத பணிகள் நிறைவுற்று உள்ளது. கூடிய விரைவில் தமிழக முதல்வரால் திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கடந்த காலங்களில் பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்த பணிகளை, முழு வீச்சில் செயல்படுத்தி தொடர் ஆய்வினை மேற்கொண்டு, பயணிகளின் தேவைக்காக பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி, மார்ச் மாதத்தில் அந்த பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்.

பெரியார் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர், அம்பத்தூர் ஆர்.கே.நகர் போன்ற 7 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் வடிவமைக்கின்ற பணி நடைபெற்று வருகிறது. பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளோடு பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் தொகுதியில் தற்போது கட்டப்பட்டு வரும் பெரியார் நகர் பேருந்து நிலையம், ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாமல்லபுரத்தில் ஒரு பேருந்து நிலையம், செங்கல்பட்டில் ஒரு பேருந்து நிலையத்திற்கான புதிய கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

18 புதிய பேருந்து நிலையங்கள் கட்டமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2025 டிசம்பருக்குள் 18 பேருந்து நிலையங்களும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். வடசென்னையில் கட்டப்பட்டு வரும் 7 புதிய பேருந்து நிலையங்களும் அடுத்தாண்டு டிசம்பருக்குள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.