திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் நெல், வாழை, கடலை ஆகியவை பயிரிடப்படும். ஆனால் பருவமழை பொய்த்துப் போனதால் கடந்த நான்கு ஆண்டுகளாகவே கால்நடைகளின் தேவைகளுக்காக வெள்ளைச்சோளம் பயிரிடப்படுகிறது.
இந்நிலையில், போதிய மழை இல்லாததால் சோளம் பால் பிடிப்பதற்கு முன்பே காய்ந்து விடும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு காலத்தில் அரிசிக்கு நிகராக இருந்த வெள்ளைச்சோளம் தற்போது வெளியூர்களிலிருந்து விதை வாங்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் வெள்ளைச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக பாதிப்படைத்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கி வெள்ளைச்சோள விவசாயத்தை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க;
ரேஷன் கார்டுக்கு ரூ.900 வழங்கப்படும்: சமூகநலத் துறை அறிவிப்பு!