ETV Bharat / state

'அரசு வழங்காட்டி நாங்க குடிநீர் வழங்குவோம்' - ஐ. பெரியசாமி அதிரடி! - திண்டுக்கல் ஆட்சியர்

திண்டுக்கல்: 'ஒட்டன்சத்திரம், நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னையை மாவட்ட நிர்வாகம் தீர்க்காவிட்டால் நாங்கள் களத்தில் இறங்கி பைப் லைன் மூலமாக மக்களுக்கு தண்ணீர் வழங்குவோம்' என்று திமுக துணை பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஐ. பெரியசாமி
author img

By

Published : Jun 18, 2019, 11:48 AM IST

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வுக் காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக துணை பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி தலைமையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார், நத்தம் எம்.எல்.ஏ ஆண்டி அம்பலம் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அதன் பின்னர் பேசிய ஐ. பெரியசாமி, இன்றைய சூழலில் பொதுமக்கள் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை பணம் கொடுத்து ஒரு குடம் நீர் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அவசர காலமாக கருதி உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், ஏற்கனவே கலைஞர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி ஆத்தூர் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நீர் வழங்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இதே நிலையில் நீடித்தால் குடிநீர் வழங்க நாங்களே நேரடியாக களத்தில் இறங்கி பைப் லைன் போட்டு பணிகளை செய்ய உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Intro:திண்டுக்கல் 17.6.19

திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் 15 நாட்களுக்குள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் : ஐ. பெரியசாமி

Body:திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நத்தம், பழனி ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக துணை பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி தலைமையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அதன் பின்னர் பேசிய ஐ. பெரியசாமி, குடிநீர் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறோம். இன்றைய சூழலில் பொதுமக்கள் 5 ரூபாயிலிருந்து 15 ரூபாய் வரை பணம் கொடுத்து ஒரு குடம் நீர் வாங்கி பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அவசர காலமாக கருதி உடனடியாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே கலைஞர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை முழுமையாக ஆத்தூர் பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட வேண்டும். தண்ணீர் தட்டுப்பாடு இதே நிலை நீடித்தால் குடிநீர் வழங்க நாங்களே நேரடியாக களத்தில் இறங்கி பணிகளை செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம்.

அதேபோல காமராஜர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல் வரக்கூடிய குடிநீர் திட்டத்தில் பிள்ளையார்நத்தம், புதுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கிட வலியுறுத்தி உள்ளோம். தண்ணீர் கொண்டுவரப்படும் வழியில் உள்ள கிராமங்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம். தற்போது உள்ள அதிமுக ஆட்சி மாற்றந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சி காலத்தில் இது போன்ற பாரபட்சம் எதுவுமின்றி அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. எனது தொகுதி நிதியிலிருந்து அனைத்து நிதிகளையும் மக்களுக்கு தண்ணீர் கொடுக்கும் திட்டத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.

15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். மேலும் தனியார் நிறுவனங்கள் குடிநீர் எடுப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இது குறித்து ஏற்கனவே பலமுறை நாங்கள் புகார் கொடுத்து இருக்கிறோம். நிலத்தடிநீரை எடுத்து விற்பனை செய்யக் கூடாது என்கிற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்டத்தை மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் அமல்படுத்த மறுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.