ETV Bharat / state

'கணினிக்கும் ஆன்லைனுக்கும் வித்தியாசம் தெரியாதவர் செல்லூர் ராஜூ' - ஐ.பெரியசாமி

கணினிமயமாக்கலுக்கும் ஆன்லைன் சேவைக்கும் வித்தியாசம் தெரியாதவர்தான் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஐ பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, co operative minister i periyasamy,
I PERIYASAMY ATTACK ON SELLUR RAJU
author img

By

Published : Jun 12, 2021, 7:49 AM IST

Updated : Jun 12, 2021, 11:00 AM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று (ஜூன் 11) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் உள்ள 4,451 கூட்டுறவு வங்கிகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. மேலும், கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ஆன்லைனில் இணைக்கப்படவில்லை. முன்னாள் அதிமுக அரசு ஆட்சி முடியும் தருவாயில் அவசரகதியில் 110 விதியின்கீழ் விவசாய நகைக் கடன் தள்ளுபடி என அறிவித்திருந்தனர்.

ஒன்லி கணினி, நோ ஆன்லைன்

அதேபோல் முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு வங்கிகள் மிகச் சிறப்பாக செயல்படுகிறது என்றும் கூறியிருந்தார். ஆனால் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும் கணினி மட்டுமே உள்ளது. ஆனால் அவை ஆன்லைனில் இணைக்கப்படவில்லை. ஆன்லைனில் இணைத்தால்தான் கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் என்ன நடைபெறுகிறது என்று மத்திய கூட்டுறவு வங்கிகளுக்குத் தெரியும்.

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர் சந்திப்பு

விஞ்ஞான அமைச்சர்

கூட்டுறவு வங்கிகளில் எவ்வளவு கடன் தொகை தரப்படுகிறது, எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது கூட ஆன்லைனில் இணைக்கப்படவில்லை. இவைகளெல்லாம் தெரியாத விஞ்ஞான ரீதியான முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர், தற்போதைய கூட்டுறவுத்துறை அமைச்சர் பிடிக்காமல் வேலை செய்கிறார் என்று கூறுகிறார்.

ஆனால், கூட்டுறவுத்துறையில் விவசாயக் கடன் தள்ளுபடியில் அனைத்து பகுதிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தொடர்ந்து ஆய்வுக்கூடங்களில் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

கூட்டுறவு வங்கிகள் ஆய்வு

ஆகவே, தற்போது அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அனைத்து அலுவலர்களுக்கும் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் ஆய்வு செய்யப்பட்டு, ஆய்வில் புகார்கள் வந்ததுபோல் ஊழல் நடைபெற்றிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், விஞ்ஞான ரீதியான முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சருக்கு கணினிக்கும் ஆன்லைனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. கணினி என்பது வேறு ஆன்லைன் என்பது வேறு என்பது கூட தெரியாமல் பத்து வருடமாகக் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்துள்ளார்.

முதலமைச்சரின் கவனத்திற்கு

கிராமப்புறங்களில் என்ன நடைபெறுகிறது, அதேபோல் புதிய விவசாயிகள், உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு அவர்களுக்குக் கடன் கொடுக்கப்பட்டதா, எவ்வளவு பணம் உள்ளது ஆகியவற்றை குறித்து மத்தியக் கூட்டுறவு வங்கியில் இருப்பவர்களுக்கு யாருக்குமே தெரியாது. காரணம், அவை ஆன்லைனில் இணைக்கப்படவில்லை.

தற்போது விவசாயக் கடன் தள்ளுபடி, அதேபோல் தேவையானவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை கூட புதிதாகக் கூட்டுறவு வங்கியில் பதிவு பெற்றவர்களுக்குக் கூட தள்ளுபடி செய்யப்பட்டதாகப் புகார்கள் வந்துள்ளன. ஆகவே அனைத்தும் ஆய்வுசெய்யப்பட்டு, ஆய்வு முடிவில் கண்டிப்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்“ எனக் கூறினார்.

இதையும் படிங்க: கூட்டுறவுத்துறை பற்றி அமைச்சருக்கு ஒன்றும் தெரியவில்லை - செல்லூர் ராஜூ விமர்சனம்

Last Updated : Jun 12, 2021, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.