ETV Bharat / state

அண்ணாமலையை நடிகர் விஜய் ஆதரிக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத் அதிரடி - Hindu makkal katchi

தமிழக அரசை உடனடியாக மத்திய அரசு டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

செந்தில் பாலாஜியை மந்திரி சபையில் இருந்து நீக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்

author img

By

Published : Jun 18, 2023, 5:02 PM IST

அர்ஜூன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பு

திண்டுக்கல்: கொடைக்கானலில் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறுகையில், "யோக கலைக்கு இந்திய அரசு காப்புரிமை வாங்க வேண்டும். நமது நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட யோக கலை உள்ளிட்ட பல்வேறு கலைகள், பல இடங்களில் வணிக நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டு வருவதால் அதனை முறியடிக்க வேண்டும். எனவே அதற்கு இந்திய அரசு காப்புரிமை வாங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு போதைப்பொருள் மாநிலமாக மாறி வருகிறது. போதை போட்டு வாகனம் ஓட்டி உயிர் இழப்பதில் தமிழகம் முதல் இடம். கைம்பெண்கள் உருவாகுவதிலும் தமிழகம் முதல் இடம். இது தமிழகத்திற்கு தலைகுனிவு. இந்த திமுக ஆட்சி அனைத்திலும் தோல்வி அடைந்துவிட்டது. எனவே 40 தொகுதிகளிலும் பாஜகவின் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் என பணி செய்து வருகிறோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், " மீண்டும் மோடி மிஷன் 2024 என்ற தமிழர்கள் பக்கம் மோடி, மோடி பக்கம் தமிழர்கள் என பிரச்சாரத்தை துவங்க உள்ளோம். வருகிற ஜூலை 9ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லஞ்ச ஊழலுக்கு எதிரான ‘என் மக்கள் என் தேசம்’ என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொள்ள உள்ளார். அவரது நோக்கம் வெற்றி பெற அனைவரும் உறுதுணையாக இருப்போம்” எனக் கூறினார்.

பின் “அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு விசாரணை கைதியாக இருக்கின்ற செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர் அமைச்சராக நீடிக்கக் கூடாது. இது தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய தலைகுனிவு. தமிழகத்தில் லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி, புத்தகம் சீருடை, செருப்பு , உள்ளிட்டவை வழங்க நிதி இல்லை என அமைச்சர் கூறுவது வெக்ககேடாக உள்ளது.உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை மந்திரி சபையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் அந்த சூழலை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்தார்.

பின் நடிகர் விஜய் அரசியல் தொடர்பான கேள்விக்கு, “விஜய், அஜித், ஆகியோர் அரசியலுக்கு வர வேண்டும். நடிகர் விஜய் நல்ல முடிவு எடுத்துள்ளார். தமிழக அளவில் அதிக மதிப்பெண்களை எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கியது அவர்களை நன்கு உற்சாகபடுத்தும்.அதே போன்று நடிகர் விஜய் போதை பொருள் மறுவாழ்வு தினத்தில், போதை பொருளுக்கு எதிராக பேச வேண்டும். நிறைய இளைஞர்கள் இதில் அடிமையாகி இருப்பதாகவும் போதைப் பொருளுக்கு எதிராகவும், லஞ்ச ஊழலுக்கு எதிராகவும் போராடும் அண்ணாமலையை விஜய் ஆதரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

பின் மோடி ஆட்சியில் பெட்ரோல், கேஸ் விலை குறைக்கப்படும் எனக் கூறிய நிலையில், அதன் விலை அதிகரித்து கொண்டுதான் செல்கிறது குறித்த கேள்விக்கு உக்ரைன் போர், சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணம் என தெரிவித்தார். பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது எனக் கூறிய அர்ஜுன் சம்பத், அண்ணாமலை தொடர்பான சர்ச்சைக்கு, தலைவர்கள் இப்படி பேசி கொள்வது சகஜம் என்றும் அதிமுக வளர்ந்தால் பிஜேபிக்கு நல்லது எனவும் பிஜேபி வளர்ந்தால் அதிமுகவிற்கு நல்லது" எனவும் கூறினார்.

இதையும் படிங்க: நடிகர் விஜயின் அரசியல் பேச்சு - தளபதி தலைவர் ஆவாரா..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.