ETV Bharat / state

ஊரடங்கில் உணவுப்பொருள் தங்குதடையின்றி கிடைக்க ஹில்டாப் செயல்படுத்திய திட்டம் - dindigul district news

கரோனா ஊரடங்கில் பொதுமக்களுக்கு பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்க ஏதுவாக, சுயசேவைப் பிரிவு திட்டத்தை கொடைக்கானலில் ஹில்டாப் நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.

hilltop towers introduce the self service food
கரோனா ஊரடங்கில் பொதுமக்களுக்கு பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஏதுவாக சுயசேவை பிரிவு திட்டத்தை ஹில்டாப் நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.
author img

By

Published : May 15, 2021, 5:44 PM IST

திண்டுக்கல்: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களுக்கு இந்த ஊரடங்கில் உணவுப் பொருள்கள் தங்குதடையின்றி கிடைக்க கொடைக்கானலில் ஹில்டாப் நிறுவனம் சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஹில்டாப் கடைகளுக்கு முன்னால், பிரட்டுகள் அடங்கிய தொகுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை வாங்கவரும் பொதுமக்கள் தாங்களாகவே பணத்தை அருகிலுள்ள பெட்டியில் போட்டுவிட்டு பொருள்களை எடுத்துக்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஹில்டாப் செயல்படுத்திய திட்டம்

மேலும், கடையின் ஒரு பகுதியில் காய்கறிகளும், முகக்கவசங்களும் வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் மீதுள்ள நம்பிக்கையினால் இந்த சேவை செய்யப்பட்டுள்ளதாகவும், நாளொன்றுக்கு 100 பிரட்டுகள்வரை விற்பனையாவதாகவும் ஹில்டாப் நிர்வாகம் இது குறித்து தெரிவித்துள்ளது.

hilltop towers introduce the self service food in kodai
பணம் செலுத்தும் பெட்டி

இதையும் படிங்க: தஞ்சை மைந்தர்கள் கண்டறிந்த தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.